Saturday, 21 September 2013

தேர்வில் தோல்வியடைந்த கணினி ஆசிரியர்களை, பணி நீக்கம் செய்தது சரியே; ஜனவரிக்குள், தேர்வு நடவடிக்கையை, பள்ளிக்கல்வித் துறை முடித்துவிட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


Posted: 20 Sep 2013 10:05 AM PDT
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், தனியார் ஏஜன்சி மூலம், கணினி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டனர். 2006, அக்டோபரில், 1,880, கணினி ஆசிரியர் பணியிடங்களை, அரசு ஏற்படுத்தியது.
ஏற்கனவே பணியாற்றி வந்த கணினி ஆசிரியர்கள், முறையாக நியமிக்கப்படாததால், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், சிறப்பு தேர்வு நடத்தி, தகுதி பெறுபவர்களை, பணிவரன்முறை செய்வது என, அரசு முடிவெடுத்தது.
இந்த முடிவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சுப்ரீம் கோர்ட் வரை, வழக்கு சென்றது. "தேர்வில், குறைந்தபட்சம், 50 சதவீதம் பெறுபவர்களை, பணிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. கடந்த, 2008ல் நடந்த தேர்வில், 894 பேர், 50 சதவீத மதிப்பெண் பெற்றனர். 2010ல், நடந்த தேர்வில், 125 பேர், வெற்றி பெற்றனர். கடந்த, டிசம்பரில் நடந்த தேர்வில், 15 பேர் வெற்றி பெற்றனர்.
தேர்வில் வெற்றி பெறாதவர்களை, பணி நீக்கம் செய்ய, அரசு முடிவெடுத்து, அதற்கான, "நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, "தற்காலிக கணினி ஆசிரியர்களை, பணிவரன்முறை செய்ய முடியாது; விண்ணப்பங்களை வரவேற்று, காலியிடங்களை நிரப்பலாம்; புதிய ஆசிரியர்களை நியமிக்கும் வரை, தற்காலிக பணியாளர்கள், பணியில் தொடரலாம்,'' என, உத்தரவிட்டார்.

கணினி ஆசிரியர் பணிக்கு, வெளிச்சந்தையில் விண்ணப்பங்களை வரவேற்றதையும், பணிவரன்முறை தொடர்பான உத்தரவையும் எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தோல்வியடைந்த கணினி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ததை எதிர்த்தும், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இம்மனுக்களை, நீதிபதிகள் பானுமதி, சசிதரன் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், சிறப்பு அரசு பிளீடர் டி.கிருஷ்ணகுமார் ஆஜராகினர். மனுக்களை விசாரித்த, "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: தகுதி தேர்வில் கலந்து கொள்ள, இரண்டு முறை வாய்ப்பு அளிக்கப்பட்டும், 50 சதவீத மதிப்பெண்களை, மனுதாரர்களும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களும், பெறவில்லை. "தோல்வியடைந்தவர்களை, பள்ளிகளில் நியமிக்க தகுதியில்லை' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. எனவே, பணிவரன்முறை செய்ய கோர, அவர்களுக்கு உரிமையில்லை. பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்ப, நடவடிக்கை எடுக்கும் போது, தோல்வியடைந்த கணினி ஆசிரியர்களை, பணி நீக்கம் செய்தது சரி தான். தோல்வியடைந்தவர்கள், பணியில் நியமிக்க உரிமை கோர முடியாது என, சுப்ரீம் கோர்ட் கூறும்போது, அவர்கள் பணியில் தொடரவும் உரிமையில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்து, கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தோல்வியடைந்த கணினி ஆசிரியர்களின் பெயர்களை, வேலைவாய்ப்பகத்தில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு, பழைய, "சீனியாரிட்டி' அளிக்கப்பட வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, மற்றவர்கள் போல், மனுதாரர்களும் விண்ணப்பிக்க தகுதி உள்ளது. மனுதாரர்கள், முன்னுரிமை கோர முடியாது. வயது வரம்பை தளர்த்த, அவர்கள் கோரலாம். அதை, தகுதி அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும். கணினி ஆசிரியர் பணியிடங்களில், வரும் ஜனவரிக்குள், தேர்வு நடவடிக்கைகளை முடிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறையின், முதன்மை செயலருக்கு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டு உள்ளது.

Friday, 20 September 2013

தகுதி பெறாத கணினி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்த அரசின் உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ..

அண்மையில் நீதிமன்ற உத்தரவின்படி 652 கணினி ஆசிரியர்களை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.தகுதித் தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்கள் பணியில் தொடர உரிமையில்லை என நீதிபதி சுட்டிகாட்டியுள்ளார். மேலும் 2014-ம் ஆண்டுக்கான கணினி ஆசிரியர்கள் தேர்வை ஜனவரிக்குள் முடிக்க வேண்டும் எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

வினாத்தாள் பிழை: தமிழாசிரியர் நியமனத்திற்கு மறுதேர்வா : ஐகோர்ட் உத்தரவு...

Posted: 18 Sep 2013 06:14 PM PDT
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமனத்திற்கு நடந்த தேர்வில், அச்சுப்பிழையுள்ள கேள்விகளுக்கு, முழு மதிப்பெண் கோரி தாக்கலான வழக்கில், மறுதேர்வு நடத்துவது குறித்து, அரசுத் தரப்பில் விவரம்
தெரிவிக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை, புதூர், விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவில், "முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள், 605 பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், ஜூலை 21ல் தேர்வு நடந்தது. "பி' வரிசை வினாத்தாளில், 47 கேள்விகளில் அச்சுப்பிழைகள் உள்ளன. அச்சுப்பிழை கேள்வி, விடைகளுக்கு, முழு மதிப்பெண் வழங்க வேண்டும். தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும்' என, குறிப்பிட்டார். "தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்கப்படுகிறது; டி.ஆர்.பி., தலைவர் ஆஜராக வேண்டும்' என, ஏற்கனவே நீதிபதி உத்தரவிட்டார். இதுபோல், திருச்சி, அந்தோணி கிளாராவும் மனு செய்தார். நீதிபதி எஸ்.நாகமுத்து முன், நேற்று இம்மனுக்கள் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்களின் தரப்பில் வழக்கறிஞர்கள், ஜெயகுமாரன், லஜபதி ராய் மற்றும் டி.ஆர்.பி., தலைவர் விபு நய்யார், உறுப்பினர் செயலர்கள் அறிவொளி, தங்கம்மாள் ஆஜராயினர். டி.ஆர்.பி., சார்பில், "மொத்தம் 150 வினாக்களில், 40 வினாக்கள் பிழையாக உள்ளன. பிழையான வினாக்களை நீக்கி விடுகிறோம். மீதம், 110 வினாக்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி கூறியதாவது: அனைத்து வழக்குகளிலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என, கோர்ட் உத்தரவிடுவதில்லை. இதுபோன்ற முக்கிய வழக்குகளில் ஆஜராக, ஏற்கனவே கோர்ட் உத்தரவிட்டும், டி.ஆர்.பி., தலைவர் ஆஜராகவில்லை. கோர்ட் உத்தரவை பின்பற்ற வேண்டும் என, உங்களுக்கு தெரியாதா?
தமிழாசிரியர் நியமன தேர்வு வினாத்தாளில் பிழை ஏற்பட்டிருப்பது, துரதிஷ்டவசமானது. தமிழாசிரியர் பணிக்கு 31,983 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதில், 8,002 பேருக்கு அச்சுப்பிழையுள்ள வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளன. மூன்றில் ஒரு பங்கு வினாக்கள் பிழையாக உள்ளன. இம்மாதிரி சூழ்நிலையில் மறு தேர்வு நடத்த வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது, மனுதாரர்கள் பிரச்னை மட்டுமல்ல. பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மறு தேர்வு நடத்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு, நீதிபதி கூறினார். "மறு தேர்வு நடத்துவது பற்றி முடிவெடுக்கும் அதிகாரம், டி.ஆர்.பி., தலைவருக்கு இல்லை' என, அரசு வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து, "மறுதேர்வு நடத்துவது குறித்து அரசிடம் விவரம் பெற்று, செப்., 24ல், தெரிவிக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.

Monday, 16 September 2013

அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமன வழக்கு ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமன வழக்கு ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

-
சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு கம்ப்யூட்டர் அறிவியல் பி.எட். பட்டதாரி ஆசிரியர் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.முத்துராமன் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை மனு தாக்கல் செய்தார். அதில், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக கடந்த 20.12.12 அன்று ஐகோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. அதை தமிழக அரசு அமல்படுத்தவில்லை.

எனவே பள்ளி கல்வித்துறையின் செயலாளர் மற்றும் இயக்குனர் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.பானுமதி, கே.கே.சசீதரன் விசாரித்தனர்.

கடந்த மாதம் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் பள்ளி கல்வித்துறைச் செயலாளர் சபீதா அறிக்கை தாக்கல் செய்தார். பணி நியமன நடவடிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரியம்தான் மேற்கொள்ளும் என்று அதில் கூறியிருந்தார். மேலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெயர் பட்டியலைப் பெற்று, 652 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை 1:5 என்ற சதவீதத்தில் நிரப்ப வேண்டும். இதற்கு காலஅவகாசம் தேவைப்படும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த நிலையில் நீதிபதிகள் முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.